எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு!

0
198

எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கடல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நட்டஈடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று (05.10.2023) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ, யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு! | Compensation Payments Made To Fishermen

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை நஷ்டஈடாக எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளேவிடம் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதியரசர் முர்து பெர்னாண்டோ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இந்த விடயத்தை ஆராயாமல் உரிய கேள்விக்கு பதிலளிக்க முடியாது என குறிப்பிட்டார்.

இதன்படி, கடல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட நட்டஈடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.