அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய wwe ஜாம்பவான் ஹல்க் ஹோகனின் வளர்ப்பு நாய்

0
32

பிரபல wwe மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் தனது 71 வயதில் மாரடைப்பு காரணமாக கடந்த 24 திகதி அமெரிக்காவில் காலமானார். ஹல்க் ஹோகனின் இந்த திடீர் மறைவுக்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஹல்க் ஹோகனின் வளர்ப்பு நாய் அவரது உருவப்படத்தின் அருகே அமைதியாக அமர்ந்து ஒரு முறை குரைத்து விட்டு தொடர்ந்து தீவிர சோகத்தால் அமைதியில் ஆழ்ந்துள்ளது. 

குறித்த நாயின் இச்செயற்பாடு ஹல்க் ஹோகன் மீது கொண்டுள்ள பாசத்தையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.