‘லெஜண்ட் 02’ திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக சரவணன்: படம் எப்படி இருக்கும்?

0
122

2022ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன்.

அடுத்ததாக எதிர் நீச்சல், கொடி ஆகிய திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமாருடன் ‘லெஜண்ட் 02’ படத்தில் இணையவுள்ளார்.

தற்காலிகமாக ‘லெஜண்ட் 02’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பெப்ரவரி மாதத்தில் சரவணனின் தோற்றம் எவ்வாறு இருக்கப் போகிறது என்ற சோதனையை முடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக வெங்கடேஷ் இருப்பார்.

இந்நிலையில் அடுத்த மாதம் இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் தொடங்கவுள்ளது. மேலும் இத் திரைப்படத்தில் யார் யார் இணையவுள்ளனர் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.