உலகக் கோப்பை தகுதிகாண் சுற்று: நாளைய தினம் ஓமானை எதிர்கொள்ளும் இலங்கை அணி

0
200

உலகக் கிண்ணத்தின் 11வது தகுதிகாண் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஓமான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

குறித்த போட்டியானது நாளைய தினம் சிம்பாபேயில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (Queens Sports Club) மைதானத்தில் இலங்கை நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும் நாளைய தினம் நடைபெறவுள்ள மற்றுமொரு போட்டியான உலகக் கிண்ணத்தின் 12வது தகுதிகாண் கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லான்ட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதவுள்ளன.