கோவிட் -19 உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பேரழிவை ஏற்படுத்தியது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமாக இருந்தனர்.
இந்நோய்க்கு அறிகுறியாக இருமல், தும்மல், சளி, சுவை இழப்பு மற்றும் வாசணை இழப்பு போன்றன காணப்பட்டன. சுவை இழப்பு மற்றும் வாசனை இழப்பு போன்றன நீண்ட நாள் அறிகுறிகளாக இருந்தன. அந்த வகையில் இந்த அறிகுறியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு வாசணை திறன் மீண்டும் வந்துள்ளது.

வாசணை திறன் மீண்டும் வந்த பெண்!
அமெரிக்காவைச் சேர்ந்த 54 வயதான ஜெனிஃபர் ஹென்டர்சன் என்ற பெண்மணி ஜனவரி 2021 இல் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தலைவலி மற்றும் சோர்வு போன்ற அவரது சாதாரண அறிகுறிகள் ஒரு வாரத்திற்குப் பிறகு மறைந்தாலும், அவரது மாற்றப்பட்ட உணர்வுகள் நீடித்தன.

அவர் ஆசையாக வளர்த்த பூக்கள் மற்றும் சுவைமிக்க உணவுகள் அனைத்தும் நறுமணம் இல்லாமல் மாறியது. பின்னர் நாள்பட்ட ரீதியில் இவருக்கு அதன் மீது வெறுப்பு ஏற்பட்டது.
“பெரும்பாலான உணவுகள் குப்பையைப் போல இருகின்றன. என்னால் எதையும் மணக்க முடியவில்லை” என்று அவர் வைத்தியரிடம் கூறியுள்ளார். எதை சாப்பிட்டாலும் குப்பையை சாப்பிடுவது போல் உண்டு என்று கூறியுள்ளார்.
அவர் சாப்பிடும் பூண்டு மற்றும் வாழைப்பழம் பெட்ரோல் போன்ற மணத்தையும் ஏதோ ஒரு உலோகத்தை சாப்பிடுவது போலவும் இருந்துள்ளது. மேலும் வேர்க்கடலை வெண்ணெய் இரசாயனங்களை போன்றும் கோழி இறைச்சி அழுகியதைப் போலவும் இருந்துள்ளது.
மீண்டும் குணமாகியது எவ்வாறு?
ஸ்டெலேட் கேங்க்லியன் பிளாக் (எஸ்ஜிபி) எனப்படும் சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை பெற்று அவர் பழைய நிலைமைக்கு மாறினார். இந்த சிகிச்சையானது கழுத்தின் இருபுறமும் நரம்புகளில் மயக்க ஊசி ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கபடும்.
இந்த சிகிச்சையின் வெற்றியினாலேயே அவரது வாசனை உணர்வு படிப்படியாக குணமானது. இதன் பயனாக தான் 2 வருடங்களுக்க பிறகு காபியின் நறுமணத்தை உணரமுடிந்துள்ளது.

டிக் டாக் இல் வைரலாகும் வீடியோ
ஜெனிபர் காபி வாசனையை மீண்டும் உணர்ந்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் டிக்-டாகில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை பார்வையிட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.