இந்தியாவின் ஹைதராபாத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குக்கரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் மாநிலத்தின் சைபராபாத் ஸ்வான் லேக் அபார்ட்மெண்ட்டில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 50 வயது ரேணு அகர்வால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரேணு அகர்வால் வீட்டில் கைகள் மற்றும் கால் கட்டப்பட்ட நிலையில், பிரஷர் குக்கரால் அடித்து தாக்கப்பட்டுள்ளார். ரேணுவின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது கணவரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை அவரது வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் அரங்கேற்றி இருப்பதாக பொலிஸார் நம்புகின்றனர். பெண்ணை கொலை செய்ததுடன் வீட்டில் இருந்த 40 கிராம் தங்கம், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் தப்பியோடியவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.