மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் குழு ஒன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்றையதினம் (25-08-2022) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய சந்தேக நபரை எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.