வெற்றி வாகைச் சூடிய ஈழத்து குயில் கில்மிஷா: பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

0
192

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் “சரிகமபா” சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் இலங்கை கில்மிஷா வெற்றி பெற்ற தருணத்தின் காணொளியை ரசிகர்கள் பகிர்ந்து வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

“சரிகமபா” இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட இளம் பாடகர்கள் ஆறுப்பேரில் ஒருவரான கில்மிசா வெற்றிப்பெற்று தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிகழ்ச்சியானது நேற்று(17) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெற்றது.

Oruvan

இறுதிச்சுற்றில் முதலாவது இடத்தினை கில்மிஷவும், இரண்டாவது இடத்தினை சஞ்சனாவும், மூன்றாவது இடத்தினை ரிக்ஷிதாவும் பிடித்திருந்தனர். மேலும் வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு பத்து இலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Oruvan
Oruvan