மே மாத சம்பளம் குறைப்பா?

0
571

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.