அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகுமா இலங்கை?

0
26

இலங்கையின் தெற்கே காலி கடற்பரப்பிலிருந்த ஈரானிய கடற்படையினரை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றிய நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பல், பாணந்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது, அதனையும் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிராக, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கப் படையினர் கடும் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், ஈரானியக் கப்பல்களையும் அதிலிருக்கும் அந்நாட்டுப் படையினர் மற்றும் பொதுமக்களைக் காக்க இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள், இலங்கைக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளன.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானைத் தாக்கியதைத் தொடர்ந்து உருவான போர் நிலைமையால் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்தச் சூழலில் இலங்கையின் கடல்சார்ந்த எல்லைக்கு வெளியே நேற்றையதினம் ஒரு ஈரானிய போர்க் கப்பல் மூழ்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.