தவிசாளர் பதவியில் இருந்து சரத் பொன்சேகா நீக்கமா?

0
328

ஐக்கியமக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா நீக்கப்படவுள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கட்சி குறித்து அவர் தெரிவித்த சர்ச்சைக்குரியகருத்துக்களை தொடர்ந்தே சரத்பொன்சேகா கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார்.

அதன்படி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத்பொன்சேகாவை வெளியேற்றுவது மிகவிரைவில் இடம்பெறும் என கூறப்படுகின்றது.

அவரை கட்சியிலிருந்து நீக்குவது என்பது நீதிமன்ற விவகாரமாக மாறாலாம் ஆனால் கட்சியின் தலைவருக்கு அதற்கான அதிகாரங்கள் உள்ளது என குறிப்பிட்டுள்ளன.

அதேவேளை கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் சரத்பொன்சேகா தொடர்ந்தும் ஐக்கியமக்கள் சக்தியை விமர்சித்துவருவதுடன் சமீபத்தில் அவர் ஜனாதிபதியையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.