இலங்கைக்கு Quad அமைப்பு உதவுமா?

0
727

அவுஸ்திரேலியா இந்தியா அமெரிக்க ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பு இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சடர் மார்லெஸ் (Richard Marles) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவுவது தொடர்பில் குவாட்சகாக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புள்ளது ஆனால் தற்போது இருதரப்பு அடிப்படையில் இலங்கைக்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே கவனம் செலுத்திவருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு உதவுமா குவாட் அமைப்பு

மேலும் இருநாடுகளிற்கும் இடையில் மிகப்பெரிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான வாய்ப்புள்ளதாகவும் (Richard Marles) மேலும் குறிப்பிட்டுள்ளார்.