ஜனாதிபதி பேசும் அழகிய உலகம் பிறக்கும் வரை மக்கள் பட்டினி கிடப்பதா: திஸ்ஸ அத்தநாயக்க

0
242

ஜனாதிபதி பேசும் அழகிய உலகம் 2048 இல் பிறக்கும் வரை இன்னும் 25 வருடங்களுக்கு மக்களை பட்டினியாக வைத்திருக்க முடியுமா? என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை முழுமையாக அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழகான உரையை உரையாற்றியதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், 33 வீதமான மக்கள் மூன்று வேளை உணவு உண்பதில்லை எனவும் உலக வங்கி கணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

48 வீதமான மக்கள் உட்கொள்ளும் உணவின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.