ஈழ மற்றும் மலையகத் தமிழருக்கு உதவ முன்வருமா இந்தியா? எம்.கே.சிவாஜிவிங்கம் கோரிக்கை!

0
671

ஈழத் தமிழருக்கும் மலையகத் தமிழருக்கும் உதவிகளை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிவிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஈழத் தமிழர்களும், மலையக தமிழர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் ஊடாக உதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஈழத் தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசின் அனுமதியை தமிழக முதல்வர் ஸ்ராலின் கோரியுள்ளமையை முழுமனதுடன் வரவேற்பதாகவும்  தெரிவித்துள்ளார்.