புடவை வாங்கி தராததால் கணவர் மீது புகார் கொடுத்த மனைவி: என்ன கொடும சார் இது?

0
122

விவாகரத்து என்பது இன்று மிகவும் பொதுவானதாகி வருகிறது. தம்பதியரின் பிரிவுக்கு பல காரணிகள் காரணமாக இருக்கலாம். சில விசித்திரமான காரணங்களுக்காக பிரிந்து செல்வது இன்று சாதாரணமாகி விட்டது. அப்படி சுவாரஷ்யமான உண்மை சம்பவத்தை தான் இன்று பார்க்க போகிறோம்.

இந்தியாவில் – உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு கணவர் புடவை வாங்கித் தராததால், பொலிஸ் நிலையத்தில் அவர் மீது முறைப்பாடு அளித்துள்ள சம்பவம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் திருமண செய்து கொண்ட இந்த ஜோடி, சில நாட்களிலேயே, சிறு விஷயங்களுக்கு கூட அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.

இந்நிலையில் தனக்கு புதிய புடவை ஒன்று வாங்கி தருமாறு கணவனிடம் மனைவி கேட்டுள்ளார். அதற்கு அவரின் கணவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கணவர் தனக்கு புடவை வாங்கி தரவில்லை என்றும், தன் மீது உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. கவுன்சிலிங்கில் அவர்கள் இரண்டு பேரையும் சமரசம் செய்ய முயன்றனர்.

அதில் மனைவியின் கோரிக்கையை ஏற்று புடவை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கணவனிடம் கூறப்பட்டது. அவரும் புடவை வாங்கி தருவதாக சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. பிறகு இருவரும் ஒன்றாக கவுன்சிலிங் மையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.