என் அம்மா 47 வயதில் குழந்தை பெத்ததுக்கு நான் ஏன் வெட்கப்பட வேண்டும்..? பிரபல நடிகை பார்வதி கேள்வி

0
384

என் அம்மா 47 வயதில் குழந்தை பெத்ததுக்கு நான் ஏன் வெட்கப்பட வேண்டும்..? என்று பிரபல நடிகை கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ஆர்யா பார்வதி

மலையாள திரையுலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்யா பார்வதி. இவர் முதுலில் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமடைந்தார். சீரியலில் பிரபலமடைந்த நடிகை ஆர்யா பார்வதிக்கு பெரிய திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், நடிகை ஆர்யா பார்வதியின் தாயாருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இது குறித்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்ததும் ரசிகர்கள் அப்படியே ஷாக்காகி கமெண்ட் செய்து வந்தனர்.

நான் எதுக்கு வெட்கப்பட வேண்டும்?

இதற்கிடையில், நடிகை ஆர்யா பார்வதி கர்ப்பமாக இருக்கும் தாயாரின் வயிற்றில் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த பதிவில், முதலில் அதிர்ச்சி அடைந்த நான், இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த பதிவில் அவர் கூறுகையில்,

என் தாயார் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததும், அதை என்னிடம் சொல்ல அப்பாவும், அம்மாவும் தயங்கினர். இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்து கொள்வேன் என்று பதறினர். ஆனால், இதை என்னிடம் சொல்லாமல் நீண்ட நாள் மறைக்க முடியாது என்பதால் அவர்கள் அதை தயக்கத்துடன் என்னிடம் கூறினர். என் பெற்றோர் இந்த விஷயத்தை கூறியதும் முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதன் பிறகு, அவர்களின் எதார்த்தத்தை புரிந்து கொண்டேன். இதற்காக நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். எனது தயக்கம் உடைந்ததும் அடுத்து எனக்கு வர இருக்கும் தங்கையை வரவேற்க தயாரானேன். இப்போது எனக்கு தங்கை வந்து விட்டார். அவருடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிற. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நடிகை ஆர்யா பார்வதியை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.