பார்வையற்றவர்கள் கருப்புக் கண்ணாடி அணிவது ஏன்?: அடையாளமாகவும் பயன்படும் கருப்புக் கண்ணாடி

0
180

கண் பார்வையற்றவர்களால் காட்சிகளைத்தான் காண முடியாது. ஆனால் ஒளியை உணர முடியும். பார்வையுடையவர்களை விட பார்வையற்றவர்களின் விழித்திரை எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியது. அதனால் பிரகாசமான ஒளி பார்வையற்றவர்களை சுலபமாக பாதிக்கும். கண் கூச்சம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

விழித்திரையின் மீது விழுகின்ற பிரகாசமான ஒளிக்கு தடுப்புச் சுவராக கருப்புக் கண்ணாடி செயல்படுகிறது. அதனாலேயே பெரும்பாலான பார்வையற்றவர்கள் கருப்புக் கண்ணாடியை அணிகிறார்கள். தாங்கள் பார்வையற்றவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் ஓர் அடையாளமாகவும் கருப்புக் கண்ணாடி இருக்கிறது.