சிங்கள காடையர்களால் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்களின் உடல்கள் தொடர்பில் அரசு வெளிப்படுத்த வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் 1983 ஜூலை இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் நாடாளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்தார்.
