“உன்னால என்ன பண்ண முடியுமோ அத பன்னிட்ட“: பவர் பேங்கை கடித்து வீட்டை கொளுத்திய நாய்

0
69

பவர் பேங்கை நாய் கடித்ததால் வீட்டில் தீ பற்றிய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் ஒக்லோகாமா மாகாணத்தின் டல்சா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

டல்சா தீணணைப்பு அதிகாரிகள் பகிர்ந்த வீட்டின் உட்புற கெமராவில் இரண்டு நாய்கள் மற்றம் பூனை இருந்துள்ளது. அதில் ஒரு நாய் லித்தியம் அயன் பவர் பேங்கை கடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதன்போது விளையாட்டு தனமாக குறித்த நாய் பவர் பேங்கை கடித்து குதறுவதாவ் எதிர்பாராவிதமாக அது தீ பற்றிக் கொள்கின்றது. இதன்போது நாய்கள் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கதவு வழிய நாய்களும் பூனையும் வெளியே ஓடுகின்றது.

ஆனாலும் தீயை கட்டுப்படுத்த வீட்டில் யாரும் இல்லாததால் வீடு ழுமுவதும் கணிசமான அளவு தீ பரவியுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்ககும் போது அது தொடர்பில் அதிக அவதானம் தேவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த சான்றாகும்.