2024 இல் என்ன நடக்கும்; வைரலாகும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!

0
288

புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ், 2024-ம் ஆண்டில் நடக்கப்போகும் நிகழ்வுகள் குறித்த அவரது கணிபுக்கள் வைரலாகி வருகின்றது. 16ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ்.

அழிவின் தீர்க்கதரிசி

2024 இல் என்ன நடக்கும்; வைரலாகும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்புக்கள்! | What Will 2024 Viral Nostradamus Predictions

அழிவின் தீர்க்கதரிசி என பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பின்படி 2024 ஆம் ஆண்டிற்கான சில பயங்கரமான கணிப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2024-ல் சீனா ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சி பெறும். சீனா போர் அல்லது கடல் போரில் ஈடுபடலாம் எனவும் அவர் கணித்துள்ளார்.

அதோடு இங்கிலாந்து குறித்த அவரது கணிப்பில் இங்கிலாந்தின் அரச குடும்பம், எதிர்காலத்தில் கூடுதல் சவால்களை சந்திக்கலாம். ஹாரி புதிய மன்னராக முடிசூட்டப்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.

2024 இல் என்ன நடக்கும்; வைரலாகும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்புக்கள்! | What Will 2024 Viral Nostradamus Predictions

போப் பதவியில் மாற்றம்

மேலும் காலநிலை மாற்றம் மோசமாகிவிடும். வெப்ப அலைகள், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்ற அதிக தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும். உலகளாவிய பசி, பட்டினி, பஞ்சம் ஆகியவை அதிகரிக்கும். போப் பதவியில் மாற்றம் ஏற்படலாம் எனவும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை முன்னதாக, ஹிட்லரின் எழுச்சி, ஜே.எஃப்.கே படுகொலை, கோவிட் தொற்றுநோய் போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நாஸ்ட்ராடாமஸ் கணித்த நிலையில், தற்போது 2024 குறித்த அவரது கணிப்பு உலக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.