கோட்டாபயவின் பின்னால் உள்ள பாரிய மறைகரம் என்ன? வீரசுமன வீரசிங்க குற்றச்சாட்டு

0
636

அரச தலைவர் கோட்டாபயவின் பின்னால் பாரிய மறைகரமொன்று செயற்பட்டு வருவதாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

11 கட்சிகள் வழங்கிய யோசனைகளை நிறைவேற்றவிடாமல் மறைகரமொன்று அரச தலைவரை தடுக்கின்றது. இந்த மறைகரமே நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது.

நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான 11 கட்சிகளின் யோசனைகள் அரச தலைவரிடம் வழங்கப்பட்டன. மக்களின் தேவைகளை நோக்கி பணியாற்றுவதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.