மேல் மாகாண தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும்

0
199

போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பான அபராதம் செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் இயங்குமென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமுறையை மீறியமை

மேல் மாகாண தபால் நிலையங்களின் 24 மணிநேர சேவையில், போக்குவரத்து விதிமுறையை மீறியமைக்கான அபராதத்தை செலுத்த முடியுமென்பதுடன், பொதுமக்கள் தமக்கான ஏனைய சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் | Post Offices Are Open 24 Hours A Day

இதற்காக பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனி வீதி, பத்தரமுல்ல, கல்கிசை, நுகேகொடை மற்றும் சீதாவக்கபுர ஆகிய தபால் நிலையங்கள் 24 மணிநேர சேவையில் இருக்குமெனவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.