நாடு திரும்பியிருக்கும் மலையக குயில் அசானிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சரிகமபா போட்டியில் கலந்து கொண்டு மலையக மக்களை மட்டும் இன்றி ஒட்டு மொத்த இலங்கையர்களுக்கும் அசானி பெருமையை தேடி கொடுத்திருந்தார்.
பல கட்டங்களில் பல சுற்றுகளில் திறமையை வௌிப்படுத்தி “சரிகமப” நிகழ்ச்சியில் தனக்கான அடையாளத்தினை சேர்த்திருந்தார்.
இந்நிலையில் நாடு திரும்பிய மலையக குயில் அசானியை கௌரவிக்கும் முகமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டு வாகனப் பேரணி இடம்பெற்று வருகின்றது. இதனை பார்க்க ரசிகர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர்.




