இலங்கைக்கு செல்லமாட்டோம்; வியட்நாமில் கதறும் இலங்கையர்கள்!

0
364

கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த நிலையில், பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் 303 சட்டவிரோத புகழிட கோரிக்கையாளர்களான இலங்கையர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என கண்ணீர் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் தங்களை மீட்ட அதிகாரிகள் தங்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், குடும்பத்தோடு நாம் இங்கேயே செத்து மடிகிறோம் எனவும் தப்பிப்பிழைத்த பெண்ணொருவர் கூறியுள்ளார்.