வரலாற்று புகழ்மிக்க குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது அதைத்தவிர விகாரை கட்டப்பட வேண்டிய இடமல்ல.
பொலிஸார் மற்றும் இராணுவப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் குருந்தூர்மலையில் அனைவரின் ஒத்துழைப்புடனும் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது.

Kurunthurmalai
பல தடைகளை எதிர்த்து நீதியின் பக்கம் நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதித்துறை மற்றும் பொலிஸாருக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
தமிழர்கள் ஆதிகாலம் வழிபட்டு வந்த வந்த குருந்தூர் மலையிலே அவர்களை இருப்பினை இல்லாமல் செய்து இதனை ஒரு பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து விகாரை கட்டியுள்ளார்.

Kurunthurmalai
குறித்த விகாரை எந்த வித அனுமதியும் இன்றி தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான ஆதரவுடனும் அரச ஆதரவுடனும் கட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் இங்கிருந்த ஆதிசிவன் அழிக்கப்பட்டுள்ளது.தற்போது எமக்கு பொங்கல் பொங்குவதற்கு ஒரு இடத்தினை குறிப்பிட்டு அந்த இடத்தில் கல் வைத்து அதன்மேல் தகரம் வைத்து அதன்மேல் அடுப்புவைத்துதான் பொங்கவேண்டும் என்ற அதிசயமான சட்டங்களை இந்த ஆலயத்தில் பார்க்கமுடிந்தது .

Kurunthurmalai
தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியதே தவிர அது விகாரை கட்டப்படவேண்டிய இடமல்ல.
இங்கு சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழர்கள் வாழ்கின்ற பூர்வீக நிலங்களுக்கு ஒரு சட்டமாக காணப்படுகின்றது.
இந்த செயற்பாடானது தமிழர்களின் இருப்பினையும் எதிர்கால வாழ்வையும் மிகப்பெரிய கேள்விக்குட்படுத்தியுள்ளது’ என அவர் தெரிவித்தார்.
முல்லைதீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் அலையை பொங்கல் வழிபாடுகள் நேற்றையதினம் நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் பொங்கல் விழா மேற்கொள்ளப்பட்டது.

இந்த பொங்கல் விழாவை எதிர்த்து பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களினாலும் அங்கு சிறு குழப்பம் ஏற்பட்டது. அதனை பொலிஸார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
அதனை தொடர்ந்து மறுபக்கத்தில் பௌத்த பிக்குகள் அங்கு கட்டப்பட்டுள்ள விகாரையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.