மரியுபோல் நகரத்தை முற்றிலும் அழித்துவிட்டோம்: ரஷ்யா அறிவிப்பு

0
512

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 53 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.

இந்நிலையில், மரியுபோலின் முழு நகர்ப்புறமும் உக்ரைனிய படைகளில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மேலும் சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என ரஷ்யா கூறியுள்ளது.

மரியுபோலில் எவரும் நுழையவோ புறப்படவோ தடை விதிக்கப்படலாம் என்று அந்த நகரின் முழு கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டுள்ள ரஷ்ய படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.