இந்தியா சக்தி வாய்ந்தது என்பதற்காக நம் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது; அர்ஜூன ரணதுங்க

0
264

இந்தியா சக்தி வாய்ந்தது என்பதற்காக நம் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  

மேலும், 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியை விட தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணி திறமை வாய்ந்தது என என்றும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“அரவிந்த டி சில்வாவைத் தவிர, 1996 ஆம் ஆண்டு அணியை விட இன்று உள்ள கிரிக்கெட் அணி மிகவும் திறமையானது. எனினும் தற்போதைய விளையாட்டு நிர்வாகம் இளம் மற்றும் திறமையான கிரிக்கெட் வீரர்களை தவறாக வழிநடத்தியுள்ளது.

ஆசியக் கிண்ணத்தில் பல கேள்விகள் உள்ளன, அந்த வகையில் கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள கியூரேட்டர்கள் மற்றும் மைதான பணியாளர்களுக்கு ஏன் ஆசிய கிரிக்கெட் சபை 50,000 அமெரிக்க டொலர்களை வழங்கியது?

இலங்கையில் பல இந்திய சுற்றுப்பயணங்கள் நடந்துள்ளன.சில விளையாட்டுகள் மைதான ஊழியர்களின் அர்ப்பணிப்பு சேவையால் நடாத்தப்பட்டன.

மைதான பணியாளர்கள்

ஆனால் அவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கியதை நான் பார்த்ததில்லை. எத்தனை ஆண்டுகளாக மைதான பணியாளர்கள் தங்கள் சேவைகளை வழங்கினர், ஆனால் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கூட இந்த வகையான பணம் செலுத்தவில்லை.

எனவே இவை, ஊடகங்கள் ஆராய வேண்டிய உண்மைகள்” என அவர் தெரிவித்தள்ளார்.

அத்துடன் நாட்டின் தற்போதைய தேசிய வீரர்களுக்கு அவர்களின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு உட்பட பல பிரச்சினைகள் இருந்தாலும், பொறுப்புள்ள மூத்தவர்கள் என்ற வகையில் இவை கவனிக்கப்படக்கூடிய பிரச்சினைகள் என தெரிவித்துள்ளார்.

மேலும் போட்டியின் நடுவில் விதிகள் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் ஏன் குரல் கொடுக்க முடியவில்லை? அதற்கு காரணம் இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு என்பதா? இந்தியா சக்தி வாய்ந்தது என்பதற்காக நம் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.