உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி; அதிபர் புடின்

0
252

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கு அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டுமென்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.

அதன்படி மாஸ்கோவில் ராணுவம் தொடர்பான இணையதள பிளாக்கர்களுடன் உரையாடிய அவர் ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாகவும் அதேநேரத்தில் டிரோன் மற்றும் துல்லிய தாக்குதல் தொடர்பான ஆயுத தயாரிப்பில் பின்தங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி; அதிபர் புடின் | We Are Ready Peace Talks Ukraine President Putin

அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ராக்கெட்டுகள் மூலம் ககோவ்கா அணையை உக்ரைன் தகர்த்துள்ளதாக குற்றம்சாட்டிய புடின் எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தியபிறகு ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரைனுக்கு 10 மடங்கு உயிரிழப்பு அதிகம் என்றும் அவர் கூறினார்.