போர்கள் நடக்கலாம்… ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்!

0
543

எதிர்காலத்தில் நாட்டில் தரை, வான், கடலில் மாத்திரமன்றி சைபர் வெளியிலும் போர்கள் நிகழலாம் எனவே எமது படையினர் அத்தகைய தொழில்நுட்ப போருக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வலியுறுத்துகின்றார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி நிறங்கள் மற்றும் பல்கலைக்கழக நிறங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (25) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெற்றிகரமான இராணுவத்தை உருவாக்குவதற்கு ஒழுக்கம், பயிற்சி மற்றும் அறிவு அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இந்த விடயங்கள் அனைத்தையும் ஏற்கனவே நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதுடன் ஜனாதிபதியின் வர்ணங்கள் மற்றும் பல்கலைக்கழக கொடி வர்ணங்களுக்கு சர்வமத ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்ததுடன் ஜனாதிபதி நிறங்களையும் பல்கலைக்கழக நிறங்களையும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்கி வைத்தார்.

போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldiers Cyber War

பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த் பீரிஸ் விசேட அறிக்கையொன்றை விடுத்ததுடன் பல்கலைக்கழக கொடிகளையும் வண்ணங்களையும் வழங்கி வைத்தார்.

போர்கள் நிகழலாம்... படையினருக்கு ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்! | Sri Lanka President Ranil Urges Soldiers Cyber War

சேர் ஜோன் கொத்தலாவல குரவாவவில் உள்ள நூதனசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்தில் குறிப்பு ஒன்றையும் வைத்தார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“இன்று சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் புகழைப் பெற்றுள்ளது. ஒரு பாதுகாப்பு பல்கலைக்கழகமாக உங்கள் திறன் காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலத்தில் போராடிய பல அதிகாரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றனர். எனவே இந்த பல்கலைக்கழகத்தை நாம் பாதுகாக்க வேண்டும். மேலும், திறமையான அதிகாரிகளை நமது ராணுவத்தில் சேர்க்க விரும்புகிறேன்.