இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வீட்டிலுள்ள தாய் பசு கன்றுக்குட்டி ஈன்றுள்ளதை எக்ஸ் தளத்தில் பகிந்துள்ளார். புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில்,
இது நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது – ‘காவ்: சர்வசுக்ஷா பிரதா’. லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளார்.

பிரதமரின் இல்லத்தில் அன்பிற்குரிய தாய் பசு நெற்றியில் ஒளியின் அடையாளத்துடன் புதிய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அதனால் அதற்கு ‘தீப்ஜோதி’ என்று பெயர் வைத்துள்ளேன என கூறியுள்ளார்.
மேலும் பசு கன்றுக்கு பிரதமர் மோடி முத்தம் கொடுக்கும் புகைப்படங்களும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.