“காத்து மேல.. காத்து கீழ” தற்போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வரக்கூடிய ஒரு பாடல். இந்தப் பாடல் ஆரம்பத்தில் பலரை முகம் சுழிக்க வைத்தாலும் நாளடைவில் தேடி கேட்ககூடிய ஒரு பாடலாக மாறியுள்ளது. இந்தப் பாடலை பால் டப்பா பாடியுள்ளதுடன் தனது சிறப்பான நடிப்பையும் அதில் வெளிப்படுத்தியுள்ளார்.
“பால் டப்பா“ இந்தப் பெயர் தற்போது சமூக வலைத்தளங்களிலும், டிஜிட்டல் உலகிலும் அதிகளவில் பேசப்பட்டு பகிரப்பட்டு வரும் ஒரு பெயர். பால் டப்பா எனும் அனிஷ் ஒரு நடனக் கலைஞராகத் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
நடனம் என்பது அவருக்கு எந்த அளவுக்கு பிரியமாக இருந்ததோ அதேபோல் இசைக்கும், இசையை எழுதுவதற்கும், அதனை நிகழ்த்துவதற்கும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

தனது தனித்துவமான பாடல்களால் ரசிகர்களை உருவாக்கி தமிழ் திரைப்பட இசைத் துறையிலும் நுழைந்தார். பால் டப்பா 2022 இல் “3SHA” மற்றும் “Ai” போன்ற பாடல்களை பாடியிருந்தார்.
அதைத் தொடர்ந்து “170CM” என்ற பாடல் அவருக்கான அங்கீகாரத்தை அதிகரித்தது. இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் அவருக்கு வழங்கிய ஒரு சிறந்த வாய்ப்பாக துருவ நட்சத்திரம் அமைந்தது.
தற்போது அண்மையில் ஜெயம் ரவியின் “Brother” திரைப்படத்தின் makkamishi பாடலும் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையிலேயே, காத்து மேல என்ற பாடல் யூடியூப் இல் டிரெண்டாகி வருவது மட்டுமன்றி ரீல்ஸ்களிலும் வரவேற்பை பெற்று வருகிறது.