எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு! – உறுதியளித்த மக்ரோன்!

0
612

எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இம்மானுவல் மக்ரோன் France Inter ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார். “நாங்கள் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் இருந்து ஆரம்பிக்கிறோம். அதேவேளை, எவ்வித நிபந்தனைகளும் அவர்கள் மீது திணிக்கப்படப்போவதில்லை!!” என மக்ரோன் குறிப்பிட்டார்.

10% வீத ஊதிய உயர்வு ஆசிரியர்களுக்கு வழங்கப்படபோவதாகவும் மக்ரோன் தெரிவித்தார்.

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பிரச்சாரங்களும் நேற்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதி வாக்குறுதியாக இம்மானுவல் மக்ரோன் இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.