பிரித்தானியா வன்முறை – புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடல்: பாதுகாப்பாக இருப்பது பற்றி கலந்துரையாடல்

0
104

பிரித்தானியாவில் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் இன்று புதன்கிழமை மாலை அவசரமாக தமிழர்கள் ஹரோவில் கூட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சுமார் 13,000 பேர் அடங்கிய வெள்ளை இனவெறியர்களின் வாட்ஸ் அப் சட்டில், ஹரோவில் உள்ள ஹாலிடே- இன் விடுதியை தாக்குதவது தொடர்பாக பேசியுள்ளதே இந்த அவசர கூட்டத்திற்கான காரணமாக அமைந்துள்ளது.

ஹரோவில் அமைந்துள்ள ஹாலிடே இன் ஹோட்டலில், பல அகதிகள் தங்கி உள்ளார்கள். இது போக ஹரோ நகரில் பல தமிழர்கள் வசித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் ஃபார் றைஜிற் (FAR-RIGHT) என்று அழைக்கப்படும் கடும் இனவாதப் போக்கு கொண்ட குழு, லண்டனில் பல நகரங்களில் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களே தற்போது ஹரோ நகரையும் இலக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கலவரமாக மாறி தமிழர்களின் வியாபார ஸ்தலங்கள் உடைக்கபடலாம் இல்லையேல் எரியூட்டப் படலாம் என்ற அச்சம் நிலவுவதால் தமிழர்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது என அங்கு வாழும் சில புலம்பெயர் தமிழர்கள் சமூகவலைளத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் இந்தக் கூட்டம் இன்று (07) பிரித்தானிய நேரப்படி மாலை 5 மணிக்கு RAYNERS LANE STATION இல் இடம்பெறவுள்ளதாக சமூகவலைத்தளப் பதிவுகள் தெரிவிக்கின்றன.