ஊடக நெறிகளை மீறுவோரே அச்சப்பட வேண்டும்: ஆஷு மாரசிங்க

0
199

ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டம் குறித்து ஊடக நெறிகளை பின்பற்றுவோர் அச்சப்படத் தேவையில்லை என ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் கலாநிதி ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஶ்ரீகொத்தாவில் நேற்று (12.06.2023) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

ஊடக நெறிகளை மீறுவோரே அச்சப்பட வேண்டும்: ஆஷு மாரசிங்க | Violators Media Feared Ashu Marasinghe

ஊடகநெறி

மேலும் கூறுகையில் ஊடக நெறிகளை மீறுவோரே இந்த சட்டங்கள் குறித்து அச்சப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்களின் பிரகாரம் எந்தவொரு ஊடக நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தையும் இரத்துச் செய்யும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உண்டு.

ஊடக நெறிகளை மீறுவோரே அச்சப்பட வேண்டும்: ஆஷு மாரசிங்க | Violators Media Feared Ashu Marasinghe

ஆனால் அவ்வாறு ஒருபோதும் அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படவில்லை. சமூக ஊடகங்கள் தொடர்பிலும் கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் கணக்கு ஒன்றை ஆரம்பித்த உடன் தாம் விரும்பியவாறு கருத்துக்களை வெளியிடும் செயற்பாடு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.