நடிகர் விஜய்யின் லியோ ட்ரைலர் வெளியாகி இணையத்தில் பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், லியோ ட்ரைலர் வெளியான 17 மணிநேரத்திலேயே 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அதே நேரத்தில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 2 மாதங்கள் கடந்திருந்தாலும் யூடிப்பில் 30 மில்லியன் பார்வையாளர்களையே பெற்றுள்ளது.

ஆனால் தற்போது ‘லியோ’ அந்த சாதனையை வெறும் 17 மணிநேரத்தில் முறியடித்துள்ளது. மேலும், லியோ திரைப்படம் 19ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.