சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆன அவர் இன்ஸ்டாகிராமில் மொத்த கிளாமர் காட்டி வெளியிடும் இணையத்தில் அதிகம் வைரல் ஆவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
சாக்ஷி எதற்காக இப்படி எல்லைமீறி கவர்ச்சி காட்டுகிறார் என சிலர் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.
வீடியோ பார்த்து வாய்ப்பு கொடுத்த எஸ்ஏசி
இந்நிலையில் சாக்ஷி சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் எஸ்ஏசி இயக்கி வரும் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தில் நடித்து வருவதாக கூறினார்.
“இன்ஸ்டாகிராமில் வெளியிடும் கவர்ச்சியான வீடியோ, போட்டோக்களை பார்த்து தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக எஸ்ஏசி என்னிடம் கூறினார்” என அவர் தெரிவித்து உள்ளார்.
நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி ஏன் இப்படி இருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகிறார்கள்.