‘என்னை புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தவம் பண்ணியிருக்கணும்’ விஜயின் AI வீடியோ

0
204

என்னை பெத்ததுக்கு எங்க அப்பாதான் தவம் பண்ணியிருக்கணும் என்று நடிகர் விஜய் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக பிப்ரவரி 2 -ம் திகதி அறிவித்தார்.

குறிப்பாக அவர், “வரும் 2026 சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், அவரது கட்சியின் அரசியல் கள பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டத்தை புஸ்ஸி ஆனந்த் நடத்தினார்.

அதோடு அவர் தனது 69 -வது படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக ரசிகர்கள் பலரும் தங்களுடைய வேதனையை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

வைரலாகும் விஜய் வீடியோ

சமீப காலமாகவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் வெளிவருகிறது. அந்தவகையில், AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட நடிகர் விஜய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சூரியவம்சம் திரைப்படத்தில் சரத்குமார் பேசும் மேடை காட்சிகளில் நடிகர் விஜய் முகம் வைத்து எடிட் செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த படத்தில், “என்னை புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தான் தவம் பண்ணியிருக்கணும் சொல்வாங்க. ஆனால் அவர் அப்பாவா கிடைச்சதுக்கு நான் தான் தவம் பண்ணியிருக்கணும்” என்ற வசனம் இடம்பெற்றிருக்கும்.

ஆனால், விஜயின் வீடியோவில் வசனத்தை மாற்றி, “அவருக்கு புள்ளையா பொறந்ததுக்கு நான் தான் தவம் பண்ணியிருக்கணும் சொன்னாங்க. ஆனால் என்னை புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தான் தவம் பண்ணியிருக்கணும்” என்று இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.