விஜய் மாமா சிகரெட் பிடிப்பது தவறு: நடிகர் விஜய்க்கு வீடியோவில் அறிவுரை வழங்கிய சிறுவன்

0
420

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியானது. இதில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இடம்பிடித்துள்ளது.

இதையடுத்து பலரும், அரசியல் ஆசை கொண்ட விஜய் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும், இது போன்ற புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக்கூடாது என விமர்சித்துள்ளனர்.

அந்த வகையில் சிறுவன் ஒருவன் விஜய் மாமா சிகரெட் பிடிப்பது தவறு அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.