லியோ படத்தின் பார்த்திபன் லுக்கில் அம்மாவை சந்தித்த விஜய்!

0
198

நடிகர் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான லியோ ஒருவாரத்தில் 461 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், திரையரங்க உரிமையாளர்கள் திருப்தியடையவில்லை. ஆனால் விஜய்யோ தளபதி 68 படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றார்.

ஆயுத பூஜை தினத்தன்று தளபதி 68 பூஜை காணொளி வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் லியோ படத்தின் பார்த்திபன் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கியுள்ளனர்.

Leo Vijay