நடிகர் விஜய் அவசராமாக ப்ரைவேட் ஜெட்டில் வெளியூருக்கு செல்லும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் நாளை முதல் வெளியாகிறது. லியோ படத்திற்கு முதல் நாளில் அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.
முன்னதாக வாரிசு, துணிவு படங்கள் வெளியான போது ரோகிணி திரையரங்கம் முன்பு ரசிகர் ஒருவர் லொரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னர் இனி எந்த படங்களுக்கும் அதிகாலை 4 FDFS-க்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
#ThalapathyVijay𓃵 Anna looks in #Thalapathy68 pic.twitter.com/N786ulaSv1
— Johnpaul (@johnpl618) October 18, 2023
அதுமட்டும் இல்லாமல் லியோ ட்ரெய்லர் வெளியான போது ரோகிணி திரையரங்கத்தினை ரசிகர்கள் சூறையாடிய சம்பவமும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. இதனால் தான் லியோ FDFS அனுமதி கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், விஜய் தற்போது அவசரமாக வெளியூர் சென்றுள்ள காணொளி வெளியாகியுள்ளது. மேலும் தளபதி 68 படப்பிடிப்பு வேலைகளுக்காக தான் வெளிநாடு சென்றிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
