ஜனனியின் ரீல் வீடியோவை பார்த்து விழுந்து விழுந்து  சிரித்த விஜய்!

0
206

கடந்த மாதம் 19ம் திகதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘லியோ’ படத்தில் ஜனனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் ஜனனி நடிகர் விஜய் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். ஜனனி பேசும் போது ‘லியோ’ ஷுட்டிங் சமயத்தில் தான் விஜய் சார் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார்.

அப்போது அவரிடம் நானும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பேன் என்றேன். உடனே அவர் எனது அக்கவுண்டை ஓபன் பண்ணி காமிக்க சொன்னார்.

அதில் என்னுடைய வீடியோ ஒன்றை பார்த்த விஜயண்ணா விழுந்து விழுந்து சிரித்தார். அவர் அப்படி சிரித்து அதுவரை நாங்கள் யாருமே பார்க்கவில்லை.

அதனை தொடர்ந்து திரிஷா மேடமும், பிரியா ஆனந்தும் கூட உன் வீடியோவை பார்த்து தான் அப்படி சிரிச்சாரா என ஆச்சரியமாக கேட்டார்கள்.

இவ்வாறு பிக்பாஸ் ஜனனி தெரிவித்துள்ளதை தொடர்ந்து அந்த வீடியோ என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் தேடி வருகின்றனர்.