இயக்குநர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு “பாஸ்” என தலைப்பு வைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியான நிலையில் அதை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மறுத்துள்ளார். விஜய் 68 படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு வருகிற புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Vijay and Kicha sudeep
கூடுதல் தகவல் என்னவென்றால், விஜய் இந்தப் படத்தில் 19 வயது இளைஞராக நடிக்க இருப்பதாகவும், அவருடன் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் உடன் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. கிச்சா சுதீப் ஏற்கனவே விஜய்யுடன் புலி திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.