வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் செயற்பாட்டு நிறுவனம் மற்றும் செயற்பாட்பாட்டாளர்களை அச்சுறுத்துவதை எதிர்த்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று காலை 10.00 மணியளவில் யாழ் கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
பதாகை வாசகம்
“அரசே மனித உரிமை அனைவருக்கும் சொந்தமானது. வடக்கு மற்றும் கிழக்கில் மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து” போன்ற வாசகங்கள் கொண்ட பதாதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை நடாத்தியிருந்தனர்.
இப்போராட்டத்தில் தாய்மார், இளைஞர்கள், யுவதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
