வியட்நாமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதியுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. ஹனோயில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானங்களே இவ்வாறு மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் போயிங் 787 விமானமும் ஏர்பஸ் ஏ321 விமானமும் மோதிக் கொண்டன.
போயிங் 787 விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஏ321 விமானத்துடன் மோதியது. போயிங் விமானத்தின் வலது இறக்கை ஏர்பஸ் ஏ321 விமானத்துடன் மோதியது.
இந்த மோதலின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. விபத்தில் பயணிகள் அல்லது பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வியட்நாம் ஏர்லைன்ஸ் நான்கு விமானிகளையும் இடை நீக்கம் செய்துள்ளது. ஏர்பஸ் A321 விமானத்தில் பார்க்கிங் பிரச்சனை இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இரண்டு விமானங்களும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தன. விபத்தைத் தொடர்ந்து இரண்டு விமானங்களும் தாமதமாகின. இந்த சம்பவம் குறித்து வியட்நாம் அரசாங்கமும் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.