நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து நடந்து வரும் புகைப்படங்களைப் பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது.
நானும் ரௌடிதான் படத்தில் இடம் பெற்றுள்ள, கண்ணான கண்ணே பட பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளான உன் விரல் இடுக்குல என் விரல் கிடக்கனும், உசூருல்ல வரைக்குமே உனக்கென்ன பிடிக்கனும் எனும் வரிகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது.
இந்த புகைப்படங்களுக்கு நடிகை நயன்தாரா ஆங்கிலத்தில் மைன் என கேப்ஷன் இட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


