வெனிசுலா ஜனாதிபதியும் மனைவியும் கைது; உலகை மிரளவிட்ட அமெரிக்க ராணுவம்

0
53

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலா மீது அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் அமெரிக்கப் படைகள் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தின.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.