தேசிய மட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்த வேம்படி மாணவி!

0
592

வளரும் நாடுகளில் உள்ள இலங்கை மகளிர் விஞ்ஞானக் கிளை மற்றும் ஸ்ரீ ஜெவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறை இணைந்து தேசிய மாணவர் புத்தாக்கப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாடலை மாணவ இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மதுரா அருந்தவம் தெரிவு செய்யப்பட்டார்.  

சிறந்த பெண் புத்தாக்குனருக்கான பதக்கத்தை ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சித்தானந்த லியநஹே அணிவித்ததுடன் இவருக்கான சான்றிதழை வளர்முக நாடுகளுக்கான பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் தலைவி பேராசிரியர் சுகந்திக்கா சுரேஷ் அவர்களும் வழங்கினர்.

குறித்த நிகழ்வு அன்மையில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூதவை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.