ரணிலுக்கு ஆதரவளிப்பதாக வேலுகுமார் அறிவிப்பு

0
112

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிளவர் வீதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

இவர் கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.