மரம் சரிந்து வீழ்ந்ததில் வாகனங்கள் சேதம்! இருவர் காயம்!!

0
298

கண்டி, பொலிஸ் மைதானத்திற்கு அருகில் உள்ள திலக் ரத்நாயக்க மாவத்தையில் இன்று (27ம் திகதி) முற்பகல் 11:00 மணியளவில் அரச மரம் ஒன்றும் சப்பு மரம் ஒன்றும் முறிந்து வீழ்ந்ததில் அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் பல சேதமடைந்துள்ளன.

இந்த விபத்தில் லொறி, கார், வேன், முச்சக்கரவண்டி உள்ளிட்ட 8 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.