நாட்டுக்கு பணம் அனுப்பினால் வாகன இறக்குமத்திக்கு அனுமதி!

0
626

வருடமொன்றுக்கு 100,000 டொலர்களை நாட்டுக்கு அனுப்பிய வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு, வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான யோசனை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரேரணையை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் , வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக பல வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.